விக்கிக்குப் பைத்தியம்! – சாடினார் பொன்சேகா.

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்கவேண்டும்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளாரே’ என்று ஊடகம் ஒன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பியிடம் இன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு காட்டமாகப் பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு விக்னேஸ்வரன் முற்படுகின்றாரா? அவருக்கு வயதுபோய் விட்டது.

நீதியரசர் பதவியை வகித்தவரே விக்னேஸ்வரன். எதற்காக அவர் இப்படிக் கதைக்கின்றார். அவருக்கப் பைத்தியமாக இருக்க வேண்டும். அவர் கூறும் வழியில் எமக்கு டொலர் தேவையில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.