சிறந்த வரவு – செலவுத் திட்டம்! – அமைச்சர் பந்துல சொல்கின்றார்.

இலங்கை மிக மோசமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறந்த வரவு – செலவுத் திட்டமாக இதனைப் பார்க்க முடிகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ரணில் அரசின் இடைக்கால வரவு – செலவுத் திடடம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வரலாற்றில் நாடு பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்த முடியாத நிலை உள்ள போதும் கடன்களை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வரும் நிலையில் நாட்டைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையிலான வரவு – செலவுத் திட்டமாக இதனைக் குறிப்பிட முடியும்.

பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல், பொருளாதாரம், நிதி முகாமைத்துவம் போன்றவற்றை முறைப்படுத்துகின்ற சிறந்த கொள்கையுடனான திட்டங்களைக் கொண்ட வரவு – செலவுத் திட்டம் இது.

அந்தவகையில் இதன் மூலம் சட்டங்கள் பல திருத்தம் செய்யப்படுகின்றன. அரசு நிதி தொடர்பான பொறுப்புக் கூறும் சட்டமும் திருத்தப்படுகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.