இந்தியாவில் பிரமிப்பை ஏற்படுத்தும் முதல் வனவிலங்கு பாதுகாப்பு நெடுஞ்சாலை.!

இந்தியாவில் உள்ள அனைத்து முக்கியப் பகுதிகளையும் குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் சென்றடைவதற்கு நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் பல முக்கிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் ஆசியாவின் மிக நீளமான மற்றும் இந்தியாவின் முதல் வன விலங்குகள் வசிக்கும் வகையில் அமையவுள்ள டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலை திட்டப்பணிகள்… அப்படி என்ன இத்திட்டத்தில் சிறப்புகள் உள்ளது? எத்தனைக் கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி என்ன சொல்கிறார் என்பது குறித்து விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலைத் திட்டம் மற்றும் அம்சங்கள்.:

டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் செல்லும் வழிகளில் விலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கத்திலும், இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை 6 மணி நேரத்திலிருந்து 2.5 மணி நேரமாகக் குறைக்கும் முயற்சியில் டெல்லி- டேராடூன் இடையே அமையவுள்ள விரைவுச்சாலை அமையவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதோடு கடந்த 2021 பிப்ரவரி மாதம் சுமார் 210 கிமீ விரைவுச்சாலைக்கான அடிக்கல் நாட்டினார் நிதின் கட்கரி. இந்த நெடுஞ்சாலைப் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்றுவரும் நிலையில் வருகின்ற 2023க்குள் மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இதன் மூலம் டெல்லியின் அகூர்தாமில் இருந்து உத்தரகாண்டின் டேராடூன், சஹாரன் சஹாரன்பூர், பாக்பத், ஷாம்லி மற்றும் காசியாபாத் போன்ற நகரங்களை இணைக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக வன விலங்குகள் நடமாட்டம் எவ்வகையில் தடைபடாமல் இருப்பதற்காக சுரங்கப்பாதைகள் அமைய பெறவுள்ளது. இப்பணியில் கடைசி 20 கிமீ விரைவுச்சாலை ராஜாஜி தேசிய பூங்கா வனப்பகுதியில் 12 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பால வடிவில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

திட்டப்பணிகள் மதிப்பீடு மற்றும் பணிகள்:

டெல்லி – டேராடூன் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும், வன விலங்குகளைப் பதுகாக்கும் வகையிலும் அமையவுள்ள விரைவுச்சாலைத் திட்டப்பணிகள் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

மேலும் டெல்லி-டேராடூன் விரைவுச்சாலைத் திட்டப்பணிகள் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் அக்ஷர்தாமில் இருந்து பாக்பத் வரை (டெல்லி முதல் உத்தரப்பிரதேசம் வரை), மற்றும் 2 ஆம் கட்டம் பாக்பத்திலிருந்து (உத்தரப்பிரதேசம்) தொடங்கி சஹாரன்பூரில் (உத்தர பிரதேசம்) முடிவடையும். 3வது கட்டமாக சஹாரன்பூரிலிருந்து (உத்தரப்பிரதேசம்) கணேஷ்பூர் (உத்தரகாண்ட்) வரையும், 4 ஆம் கட்டம் கணேஷ்பூரில் இருந்து (உத்தரகாண்ட்) டேராடூன் (உத்தரகாண்ட்) வரை அமையவுள்ளது.

வருகின்ற 2023க்குள் டெல்லி-டேராடூன் விரைவுச்சாலைகள் பணிகள் முழுவதுமாக முடிவடையவுள்ள நிலையில், ஆசியாவின் மிக நீளமான வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைக்குள் த்ரீல்லான அனுபவத்துடன் பயணிக்கும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.