மன்னார் வீதி தடுப்பில் மீன் லொரியிலிருந்து சிக்கிய 15 கோடி போதைப்பொருள்…

மன்னார் இராணுவ வீதித் தடுப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 10 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள இராணுவ வீதித் தடையில் சந்தேகத்திற்கிடமான மீன் லொறியை நிறுத்தி சோதனையிட்ட போது , லொரியின் இருக்கைக்கு அடியில் இருந்த ரகசிய அறையில், 1 கிலோ எடையுள்ள 10 ஐஸ் போதைப்பொருள் பார்சல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் லொறியின் சாரதியும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐஸ் போதைப்பொருட்களை தலை மன்னாரில் இருந்து வேறோர் பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக இராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32 மற்றும் 28 வயதுடைய தலைமன்னார் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.