லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர்: மீண்டும் களமிறங்கும் ஜாம்பவான்கள்.

ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 6 நகரங்களில் 16 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இரண்டு அணிகளுக்கான கேப்டன்கள் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஷேவாக்கும், இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு கவுதம் காம்பீரும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.