அபியின் சபந்தினி ‘සබැඳිණී’ ….. பிரணீஷாவுடன் (Video)

இசை பண்டிதரான அபிஷேக் விமலவீர இன்றைய பாடல் துறையில் ஒரு தனித்துவமான ரிதம் மேக்கர்.

பாடுவதோடு மட்டுமல்லாது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பலரது அன்பையும் , அபிமானத்தையும் பெற்றவர்.

அவரது பாடல்கள், குரல், அழகான உருவம் மற்றும் அவரது பாடும் திறன் ஆகியவற்றால் இன்றைய பாடல் ஆர்வலர்களின் கவனத்தை அவரால் ஈர்க்க முடிந்துள்ளது.

‘அபி’ என பெயரால் அறியப்படும் இவர், இக்காலத்தில் தனது பாடல் அமைப்பாலும், இனிமையாலும் அனைவரின் உரையாடலுக்கும், அன்புக்கும், ஈர்ப்புக்கும் உட்பட்டவர்.

செப்டம்பர் 2ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட சபந்தினி வீடியோ யூடியூப் பாடல் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

வேகமான பாடல்கள் பிரபலமாகிவிட்ட இந்த நேரத்தில், அபியின் இந்த இணைப்புப் பாடல் இன்றைய இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த பாடலின் இணை பாடகர் மற்றும் பாடகர் அபியின் வழிகாட்டுதலின் கீழ் தி வாய்ஸ் டீனில் முதல் இடத்தைப் பெற்ற பிரணீஷா என்ற தமிழ் பெண் ஆவார்.
அபியின் சமீபத்திய சபந்தினி இசை ராகதாரி இசையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் நடன மற்றும் இசை இந்தியப் பண்பாட்டுப் பண்புகளையும் சுட்டிக் காட்டுகிறது.

இந்த நேரத்தில் பாடலை விமர்சனம் செய்வதை விட , பாடலைப் பார்த்து, ரசிக்குமாறு இசை ரசிகர்களை அழைக்கிறோம்.

பாடலை அபியே எழுதியுள்ளார். அபியின் பாடல் எழுதும் திறன் மேலும் மேம்படுத்திக் கொள்வார் என நினைக்கத் தோன்றுகிறது.

அவரது பாடல்களை ரசிக்க முடியும் என்பதை அவரது ரசிகர்களின் குறிப்புகளில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.

அபி தனது சமீபத்திய பாடலைப் பற்றி முகநூலில் எழுதியிருந்தார்.

“அவன் அதே நாட்டிலிருந்து வந்தவன்
உன்னை வெகுதூரம் அழைத்துச் செல்ல…
கண்ணீர் நதியால் முணுமுனுக்கும் குரலோடு
ரோஜா காட்டில் சிவப்பு ரோஜாக்கள்
நான் எப்போதும் முணுமுணுத்த பாடல் இது.
வருடங்கள் ஆகிவிட்டது…
இதயம் முழுவதும் சிரிப்பு மலர்ந்தது…..

சபந்தினியை (அன்பே), எழுதுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆனது.

ஆனால் இந்தப் பாடலின் இசையோடு கூடிய வார்த்தைகளுக்காகவும் , காட்சிகளை அழகுபடுத்தவும் நாங்கள் கடுமையாக உழைத்தோம்.

உண்மையில் பாடல் அதன் பிறகு முழுமை பெற்றது

மேலும், அந்த இசை வடிவ தொடருக்கு ஏற்ற காட்சிகளோடு கூடிய நடனத்தை உருவாக்க சிறிது காலம் எடுத்தது.

எனவே இணைந்திருந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

நமது புதிய தலைமுறையில் ஒரு செமி கிளாசிக்கல் பாடல் இல்லாத குறை இந்தப் பாடலின் மூலம் ஓரளவு பூர்த்தியாகும்.

ஒரு சின்ன ரகசியம் சொல்கிறேன்.

ஒரு நாள் புன்னகைக்காக பல காலம் கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.

ஆனந்தக் கண்ணீரை தந்த உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்.”

ஒரு நல்ல படைப்பை உருவாக்க நல்ல ரசிகர்கள் தேவை.

இன்று நான் பிரணீர்ஷாவுடன் ஒரு புதிய கதையைச் சொல்லியிருக்கிறேன்.

அதனால்…..

சபந்தினி , இன்று முதல் உங்களுடையது….

(அபி – பிரணீஷா)

‘சபந்தினி’ என்பது, அபிஷேகா விமலவீர தனது திறமைகளை அருமையான முறையில் செம்மைப்படுத்திய ஒரு சிறப்பு படைப்பாகும்.

நடனத்தோடு கூடிய பாடல் வீடியோ

அபியோடு இணைந்து பாடலை உருவாக்கிய குழு

Artistes ~ Visharada Abhisheka Wimalaweera
&
Pranirsha Thyagaraja 

Melody and Music ~ Gimhana Komangoda
Lyrics ~ Abhisheka Wimalaweera
Video Director ~ Chamil Pathirana @Thaala Roopa
Music Production and Programming – Atishay Jain ( Kolkata,India)
Flute – Soumyajyoti Ghosh
Sitar – Subhash Bose
Tabla and percussion – Amit Choubey
Mixing and mastering – Ritesh Gandhi @ Strings,The Studio ( Kolkata, India)
Chorus (Colombo Oriental Choir) – Madusha Chamari de Silva, Lakmee Dassanayake, Shashi Warnareka Mallikarathne, Hansani Erandi Karunarathne, Chamodya Rashmiprabha Kuruppu, Khanika Edirimanne
Dop – Ranga Sb
Edit – Thaala Roopa Studio
Art Director – Buddi Sanjaya
Assistant Director – Roshan Wimalasena
Colorist – Yashoda Dnupama @ Coloration Colombo
Production Manager – Chanaka Fernando
Makeup – Lakshitha Jayasinghe / Suranga Akash
Choreography – Gayan Srimal |Thilini Madushani | Kavindu Maduushan
Performed by TM Dancer, Wishmitha Prabhath, Rashmi Nilochana, Anjana Heenatigala, Shashwan Ranasinha, Sonashi Nethmini, Sandun Charuka Munasinghe, Rumesha Jayakodi, Githmi Warsha, Lasiru Ayesh Nimnada
Video Production – Thaala Roopa
Location Partner Light Of Asia
Special Thanks
Swapneel Jaiswal Vihanga Rukshan
(நன்றி –mirrorarts.lk)
தமிழில் : Jeevan

 

 

Leave A Reply

Your email address will not be published.