பிரேசில்: கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 14 பேர் பலி.

பிரேசில் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடாகும். இந்நிலையில், அந்நாட்டின் மராஜோ தீவில் இருந்து பாரா மாகாணம் பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் கடலில் மூழ்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் மாயமாகினர். கடல் நீரில் மூழ்கி மாயமான 26 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்துக்குள்ளான படகு பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.