திருகோணமலை அரசாங்க அதிபர், இரா.சம்பந்தன் சந்திப்பு.

திருகோணமலை அரசாங்க அதிபர் அசங்க அபயவர்த்தனவுக்கும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் ச .குகதாசன் ஆகியோருக்கும் இடையே திருகோணமலைக் கச்சேரியில் இன்று சந்திப்பு நடைபெற்றது.

வனத்துறை மற்றும் வனவிலங்குத்துறை ஆகியன சாம்பல்த்தீவுக் களப்புப் பகுதியில் 360ஏக்கர் நிலத்தை ஒதுக்கீட்டு வனப்பகுதியாக அறிவித்து வர்த்தமானியில் பிரசுரிக்கும் செயற் பாட்டில் இறங்கியுள்ளன.

இதற்குள் தமிழ் மக்கள் பலரின் உறுதிக் காணிகளும் அடங்குகின்றன. இந்தக் காணிகளுக்குள் உரிமையாளர் எந்தவொரு வேலையும் செய்யக் கூடாதென அரசுத் தடை விதித்துள்ளது.

இந்த தடையை நீக்கி தனியார் தத்தம் காணிகளில் தாம் விரும்பும் பணிகளை செய்ய ஆவன செய்ய வேண்டும். என வலியுறுத்தும் ஒரு சந்திப்பு திருகோணமலை அரசாங்க அதிபர் திரு. அசங்க அபயவர்த்தனவுக்கும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா. சம்பந்தன் மற்றும் திரு. ச .குகதாசன் ஆகியோருக்கும் இடையே திருகோணமலைக் கச்சேரியில் இன்று நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.