தொப்புள் கொடி கூட அகற்றப்படாத சிசுவொன்று குளம் அருகே …. (Video)

இன்று (25) காலை பண்டாரகொஸ்வத்த பகுதியில் உள்ள குளம் ஒன்றின் அருகே இருந்த காட்டு பகுதியில், பெண் ஒருவர் புதிதாகப் பிறந்த சிசுவென்றைக் கண்டெடுத்ததாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிசார் , உடனடியாக குழந்தையை 1990 ஆம்புலன்ஸ் மூலம் நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.

ஒரு பெண் தனது மாடுகளை மேய்க்கச் சென்றபோது, ​​அருகே உள்ள காட்டில் இருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டு, அங்கே சென்ற போது புதிதாய் பிறந்த குழந்தை , தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஒரு சாக்கு சாக்கில் இருப்பதைக் கண்டுள்ளார்.

கிராம மக்கள் காவல்துறை மற்றும் ஆம்புலன்சுக்கு போன் செய்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.