சீன ஜனாதிபதி சிறைப்பிடிக்கப்பட்டாரா – மறுக்கிறது சீனத் தூதரகம்.

சதிப்புரட்சி மூலம் சீன ஜனாதிபதி கைது செய்யப்பட்டதாக  வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என்றும் நம்பத்தகாத செய்தி நிறுவனங்களால் இட்டுக்கட்டப்பட்டது என்றும் சீனத் தூதரகம், தெரிவித்துள்ளது.

வடக்கு எல்லையில் சீன மற்றும் இந்திய படைகள் சண்டையிட்டு வரும் நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது.

சீன இராணுவ தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16-ம் திகதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனினும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது மத்திய ஆசிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதாகவும், சீன அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ், வெளிநாட்டு பயணத்திலிருந்து திரும்பும் எவரும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன்படியே தற்போது ஜனாதிபதி தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் போலியான செய்திகளை பரப்புவத்கு எதிராக தூதரகம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதேவேளை தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன இராணுவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.