ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் பயணம் இன்று..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (25) இரவு ஜப்பான் செல்லவுள்ளார்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட 217 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 அதிதிகள் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தங்கியுள்ள காலப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானின் புதிய பிரதமர் மற்றும் பல உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.