ரணிலின் அரசியல் நாடகமே தேசிய பேரவை! – சாடுகின்றது ஜே.வி.பி.

“சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் நாடகமே தேசிய பேரவையாகும். அரசியல் நோக்கம் கொண்ட அந்தப் பேரவை பயனற்றதாகும்.”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. மறுபுறத்தில் தனக்குத் தேவையான அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலை அரசு முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில், தேசிய பேரவை எதற்கு? பெயரளவில் மட்டுமே அது இருக்கப் போகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. தற்போதைய அரசும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றனர்.

எனவே, சர்வதேச மட்டத்தில் எழும் அழுத்தங்களை சமாளிப்பதற்காகவே ஆளுங்கட்சி தேசிய பேரவையைப் பயன்படுத்த முயற்சிக்கின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.