6வது டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் பாகிஸ்தான் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 6வது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 59 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் வில்லி மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி 41 பந்தில் 88 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்த தொடரில் தற்போது 3-3 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனிலை பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.