டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் – சூர்யகுமார் புதிய சாதனை.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து, நேற்று 2-வது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ராகுல், ரோகித், கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 237 ரன்களை குவித்தது.

அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்து மிரட்டினார்.

இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் மிகவும் குறைந்த பந்துகளில் (573 பந்துகள்) ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் பெற்றுள்ளார்.

குறைவான பந்துகளில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு: 573 பந்துகள் – சூர்யகுமார் யாதவ் 604 பந்துகள்- கிளென் மேக்ஸ்வெல் 635 பந்துகள்- கொலின் மன்றோ 640 பந்துகள்- எவின் லூயிஸ் 654 பந்துகள்- திசர பெரேரா. இதேபோல், டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த (இன்னிங்ஸ் அடிப்படையில்) வீரர்கள் பட்டியலில் இவர் மூன்றாவது இடம். விராட் கோலி 27 இன்னிங்சிலும், கே.எல்.ராகுல் 29 இன்னிங்சிலும் 1000 ரன்களைக் கடந்துள்ளனர்.

மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுலுடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். முதல் இடத்தில் இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதமடித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.