சாய்ந்தமருது கடற்கரையில் பெண்ணின் சடலம்! – அடையாளம் காண மக்களின் உதவியை நாடும் பொலிஸார் கடற்கரையில் பெண்ணின் சடலம்! – அடையாளம் காண மக்களின் உதவியை நாடும் பொலிஸார்.

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ள சடலம் தொடர்பில் அடையாளம் காணப் பொலிஸார், பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளனர்.

சாய்ந்தமருது கடற்கரையில் இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்ற சாய்ந்தமருது பொலிஸார் கல்முனை கடற்படையினருடன் இணைந்து கடலில் மிதந்த சடலத்தை மீட்டனர்.

சடலம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில் அது அடையாளம் காணப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கல்முனை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

ஏதாவது பொலிஸ் நிலையத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தால் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களைப் பொலிஸார் கேட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.