35 வருடங்களுக்குப் பிறகு யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அரச பேருந்து சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் 35 வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் (29) அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரம் பல வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் பொது மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.