ஆபரேசன் கஞ்சா வேட்டை: கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்

ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சாவை வியாபாரிகளின் 2000 வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்து அதனால் நிகழும் குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. எனவே, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் கஞ்சா கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான சோதனை நடத்தப்பட்டது.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் இந்த வேட்டை நடத்தப்பட்டது. அதன் பின்பாக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற சோதனை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து அதிகளவில் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு சோதனைகளின் முடிவுகளில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அவர்களுக்கு சொந்தமான 2000 வங்கி கணக்குகளை தமிழக போலீசார் முடக்கி உள்ளனர். 2000 வங்கி கணக்கில் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.