விமானத்தை தவறவிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் டி20 உலகக்கோப்பையிலிருந்து நீக்கம்..!

டி20 உலகக்கோப்பை தொடர் வரும்16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான வீரர்களை, போட்டியில்  பங்குபெறும் நாடுகள் அறிவித்துள்ளதோடு, போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகிறது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மயர் டி20 உலகக்கோப்பைக்கான் அணியில் இடம்பெற்றிருந்த நிலையில், போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய விமானத்தை தவறவிட்டார். இதன் காரணமாக் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெஸ்ட் கிரிக்கெட் இயக்குநர் ஜிம்மி ஆடம்ஸ் கூறுகையில், “குடும்பக் காரணங்களுக்காக ஹெட்மயரின் விமான பயணம் சனிக்கிழமையிலிருந்து திங்கட்கிழமைக்கு மாற்றினோம். ஆனால் அவர் இன்று புறப்படும் விமானத்தையும் பிடிக்க விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் செல்ல இயலாது என்று தெரிவித்துவிட்டார்.

மேலும் அவர் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்வதில் தாமதங்கள் மற்றும் சிக்கல்கள் இருந்தால் வேறு வழியில்லாமல் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டோம் என்று தெரிவித்தார். ஹெட்மயருக்கு பதிலாக 34 வயதான ஷமர் ப்ரூக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்,  

Leave A Reply

Your email address will not be published.