சர்வதேச அழுத்தம் மூலம் எதையும் சாதிக்க முடியாது! – நாமல் கருத்து.

“ஜெனிவா அமர்வுகளின் கவனக்குவிப்பைப் பெற பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொண்டு தமிழ் மக்களை எத்தனை ஆண்டுகளுக்குத் தமிழ் அரசியல்வாதிகள் ஏமாற்றப் போகின்றார்கள்? சர்வதேச அழுத்தத்தால் இங்கு எதையும் சாதிக்க முடியாது.”

இவ்வாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழியாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு ராஜபக்சக்களின் தலைநகரான அம்பாந்தோட்டை – தங்காலையில் நடைபெற்றது. இது தொடர்பில் வினவியபோதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிரணியினரின் போராட்டங்கள் மூலம் சட்டங்களை நீக்க முடியாது; ஆட்சியையும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, போராட்டங்கள் மூலம் சர்வதேச அழுத்தங்கள் ஊடாக எதையும் சாதிக்கவும் முடியாது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆட்சியில் ஜனாதிபதியும் பிரதமரும் மாறினார்களே தவிர ஆட்சி மாறவே இல்லை.

இதைத் தமிழ் அரசியல்வாதிகளும், சஜித் அணியினரும், காலிமுகத்திடல் போராட்டத்தை வழிநடத்தியவர்களும் கவனத்திற்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.