வடமராட்சி வல்லிபுர ஆழ்வாருக்கு இன்று தேர்!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்., வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (08) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

முன்னதாக வசந்த மண்டபப் பூஜைகள் இடம்பெற்று சக்கரத்தாழ்வார் தேரேறி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை சமுத்திர தீர்த்தமும், நாளைமறுதினம் திங்கட்கிழமை கேணித் தீர்த்தமும் நடைபெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன் பெருந் திருவிழா நிறைவுறும்.

Leave A Reply

Your email address will not be published.