தீபாவளிக்கு சொந்த ஊர் போகும் பயணிகளுக்காக 16,000 பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் தகவல்

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 16,888 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர்,

திருவிழா காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் எதுவாக சென்னையிலிருந்து 10,518 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் தினசரி இயக்கும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 4218 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

21, 22 ,23 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து மட்டும் மொத்தம் 10,518 சிறப்பு பேருந்துகளும் பிற ஊர்களிலிருந்து 6, 370 பேருந்துகள் என மொத்தம் 16,888 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மாதவரம் , கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ் , தாம்பரம் ரயில் நிலைய நிறுத்தம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு ஆகிய நிறுதங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார்.

பேருந்து இயக்கம் குறித்து 9445014450 , 9445014436 ஆகிய இரண்டு எண்களில் அரசு பேருந்துகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என பேசிய அமைச்சர் சிவசங்கர், இதுவரை 38000 பேர் சென்னையிலிருந்து பிற பகுதிக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் பிற ஊர்களிலிருந்து சென்னை வருவதற்கு 18000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் 24 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை பிற பகுதிகளிலிருந்து சென்னை வர 13,152 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் முன்பதிவு பொறுத்தவரையில் கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், உள்ளிட்ட இடங்களில் முன் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் TNSETC செயலி வாயிலாக இணையதள , வாயிலாகவும், டிக்கெட் புக் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1800 425 6151 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம், ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்தார்.

21ம் தேதி முதல் 26 தேதி வரை சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு 24 மணிநேரமும் மாநகர இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். 500 பேருந்துகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 2000 பேருந்துகளில் காமிராக்கள் பொறுத்தும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவினில் இனிப்புகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் இபேருந்து டெண்டர் விடப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு வழக்கமான வருவாயை விட 25 விழுக்காடு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது என்றும் பேருந்துகள் குறிப்பான புகார்கள் ஏதாவது இருந்தால் , உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.