மதுரைக்கு இயக்கப்படும் ரயில்களின் நேர மாற்றம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே சார்பில் மதுரை ரயில் நிலையம் மற்றும் அதன் வழித்தடங்களில் அடுத்த வாரம் முதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதன் காரணமாக மதுரையில் இருந்து அல்லது மதுரை வழியாக செல்லும் ரயில்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை வழியாக, மதுரையில் இருந்து கிளம்பி தமிழ்நாட்டிற்குள் ஓடும் 3 ரயில்களின் நேர மாற்றங்கள் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரி ப்புபணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..

மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில்- 16868:

மதுரை – திண்டுக்கல் இடையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மதுரை-விழுப்புரம் இடையே காலை 4.05 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற திங்கள் அதாவது 17 ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மற்றும் 26-ந்தேதி முதல் 29 ந்தேதி வரை மதுரை-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து தொடங்காமல் அதற்கு அடுத்த நிறுத்தமான திண்டுக்கல்லில் இருந்து 5.05 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம்-மதுரை எக்ஸ்பிரஸ் 06652:

ராமேஸ்வரம் முதல் மதுரை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மற்றும் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து) நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து காலை 5.40 மணிக்கு இயக்கப்படும் இந்த ரயில் 2.30 மணி நேரம் தாமதமாக 8.10 மணிக்கு புறப்பட்டு மதுரை நோக்கி செல்லும்.

மதுரை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (06653):

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் திரும்பும் மதியம் ரயிலிலும் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எப்போதும் மதுரையில் இருந்து 12.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் வரும் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மற்றும் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து) 50 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.