உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் தீர்மானத்துக்கு எதிராக கூட்டறிக்கை கைச்சாத்து! வீடியோ/படங்கள்

தேர்தல் முறைமை திருத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் வரைபடத்தை சுருங்கச் செய்யும் அரசின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டாக இன்று கையெழுத்திட்டன. நாடாளுமன்றத்தின் குழு இலக்க அறை 7 இல் இது இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி,43 ஆம் படையணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிவிதுரு ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா மஹாஜன பக்ஷய, இலங்கை சமசமாஜ கட்சி, ஶ்ரீலங்கா கமியூனிடிஸ் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நவ லங்கா நிதஹஸ் பக்ஷய, ஜனநாயக மக்கள் முன்னணி, விஜயதரணி தேசிய சபை, முன்னிலை சோஷலிஸக் கட்சி, உத்தர சபா உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் ஜயவர்தனபுரவில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஏகோபித்த தீர்மானத்தின் படி இந்தக் கூட்டறிக்கை வெளியிடப்படுகிறது.

தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சித்தால், தனித்தனி கட்சியாகவும், கூட்டாகவும் கடுமையாக எதிர்ப்பது என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதோடு, அந்த முடிவின் பிரகாரம், ஒரு பூர்வாங்க நடவடிக்கையாக அறிக்கையில் கையொழுத்திடப்பட்டது.

இது தொடர்பான அறிக்கையில் கையெழுத்திட மக்கள் விடுதலை முன்னணி தனது முழு உடன்பாட்டையும் தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்துக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட தரப்புக்குத் தனித்தனியாக தெளிவூட்டுவதற்கும், மக்களுக்குத் தெளிவூட்டுவதற்கும், அதற்கு அப்பால் இந்தத் தன்னிச்சையான செயல்முறை குறித்து சர்வதேச சமூகத்துக்கும் தெரிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.