சர்தார் திரைப்படம் எப்படி இருக்கு.! முழு திரை விமர்சனம்.

நடிகர் கார்த்திக் நடிப்பில் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் சர்தார். இந்த படத்தை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் கார்த்திக் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து லைலா, ராஷி கண்ணா, ரஜியா விஜயன், முனிஷ்காந்த், சிறுவன் ரித்விக் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் பி எஸ் மித்ரன். இவர் நடிகர் கார்த்திகை வைத்து சர்தார் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

தற்போது இந்த படம் எப்படி இருக்கிறது? படம் வெற்றியடைந்ததா தோல்வி அடைந்ததா என்பது குறித்த முழு விமர்சனங்களை தற்போது பார்க்கலாம்.

இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அப்பா மகன் என்ற கதாபாத்திரங்களில் கார்த்திக் நடித்திருக்கிறார். இதில் அப்பாவாக இருக்கும் கார்த்திக் ராணுவத்தில் உளவு வேலை பார்த்து வருகிறார். அவர் இந்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்றதில், ஒரு கட்டத்தில் அவர் மீது அரசு தேச துரோக குற்றம் சாட்டுகின்றது.

இந்தக் கதை ஒருபுறம் இருக்க, மறுபுறம் மகன் கார்த்திக், தானும் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று துடிக்கிறார். அவரை அவரது சித்தப்பா முனீஷ்காந்த் வளர்த்து வருகிறார். வளர்ந்த பின்பு அவரும் ஒரு போலீஸ் அதிகாரியாக மாறுகிறார்.

தான் மிகப்பெரிய அளவில் பிரபலமாக வேண்டும் என்றால் தனக்கு ஒரு வலுவான கேஸ் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஒருபுறம் தனது சிறுவயது தோழியான ராசி கண்ணாவை காதலித்து வருகிறார்.

இதற்கிடையே பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் குடிநீர் விற்கும் அவலங்களுக்கு எதிராக போராடி வருகிறார் லைலா. பின்னர் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் வரும் ஒரு கோப்பு காணாமல் போய்விடுகிறது. இதை திருடியது லைலா தான் என்று கார்த்தி கண்டுபிடித்து லைலாவை பின்தொடர்கிறார். லைலாவின் மகன் ரித்விக்கும் கார்த்தி உடன் தனது அம்மாவை தேடுகிறார்.

ஒரு கட்டத்தில் லைலா இறந்துவிட்டது தெரிய வருகிறது. லைலா தற்கொலை செய்யவில்லை என்பது கார்த்திக்கு தெரிய வருகிறது. இதன் பின்னணி குறித்து ஆராயத் தொடங்கும் அவருக்கு குடிநீர் வியாபாரம் ஆக்கப்படுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அதிக விலைக்கு கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படும் விஷயங்களும், வாட்டர் மாஃபியா குறித்தும், லைலா சேகரித்து வைத்திருந்த வீடியோவின் மூலம் கார்த்திக்கு தெரிய வருகிறது.

லைலாவின் கொலையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சர்தார் என்ற உளவாளியை வெளியே அழைத்து வர லைலா எதற்காக முயற்சி செய்தார்? சர்தார் யார்? சர்தார் இந்தியாவிற்கு வந்து எப்படி வாட்டர் மாஃபியாக்கு எதிராக தனது மகனுடன் சேர்ந்து தடுத்து நிறுத்துகிறார் என்பதே படத்தின் மீதி கதை.

இந்த படத்தில் வயதான சர்தார் கதாபாத்திரத்திலும் இளமையான கார்த்தி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார் கார்த்திக். இவருடன் சேர்ந்து ராஷி கண்ணா, ரித்விக், லைலா போன்றவர்கள் தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக கொடுத்து இருக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை வழக்கம் போல படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து இருக்கிறது. கேமரா ஒர்க், திரைக்கதை, வசனங்கள் என அனைத்தும் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் குறித்து சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை இயக்குனர் பி எஸ் மித்திரன் அளித்திருக்கிறார்.

முதல் 15 நிமிடங்கள் மெதுவாக சென்ற போதிலும் அடுத்த சில நேரங்களிலேயே விறுவிறுப்புகள் தொற்றிக் கொள்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் கணிக்கக் கூடிய வகையில் இருந்தாலும், நம்மை இருக்கையில் அமர வைத்து படம் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது.

படத்தின் பாசிட்டிவ் விஷயங்களாக கார்த்திக்கின் நடிப்பு, சர்தார் ஆக வரும் கார்த்திக்கின் காட்சிகள், திரைக்கதை, சர்தாரின் பிளாஷ்பேக் போன்றவை இருக்கின்றன. படத்தின் நெகட்டிவ் விஷயங்களாக ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை மற்றும் வலிந்து திணிக்கப்பட்ட பாடல்கள் இருக்கின்றன.

மொத்தத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வை சமூகத்திற்கு சொல்லும் செய்தியாக இந்த தீபாவளியை சர்தார் கொண்டாடி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.