தேசிய மருத்துவமனையில் கொள்ளையடித்த நபர் நிபுணராக பயிற்சிக்கு வந்த ஒரு வைத்தியர்.

பொம்மை துப்பாக்கியால் கொழும்பு தேசிய மருத்துவமனை கணக்கியல் பிரிவின் பணத்தைக் கொள்ளையடித்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிபுணராக பயிற்சி பெற வந்த மருத்துவர் என்று போலீசார் கூறுகின்றனர்.

வேறொரு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் பின்னர் ஒரு நிபுணராக பயிற்சி பெறுவதற்கு கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்துள்ளார்.

கொள்ளையிட்டவரை பின் தொடர்ந்து சென்று வருணி போகஹவத்த என்ற பெண் போலீஸ் அதிகாரியே கைது செய்தார். இவர் மாத்தறை போலீஸ் பகுதியில் பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத் தக்கது.

சந்தேக வைத்தியர் கொள்ளையிட்ட 79 லட்சத்தையும் பொம்மை கைத்துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Comments are closed.