சஜித் தரப்பின் வேட்பு மனுக்கள் குறித்த மனு விசாரணை இன்றி தள்ளுபடி

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு கடந்த 22 ஆம் திகதி பரிசீலனைக்கு உட்படுத்தவிருந்த நிலையில் பிரதிவாதிகளில் சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் வரையில் உயர்நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.