9 மாதங்களில் 435 படுகொலைகள் பதிவு!

இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 435 கொலைகள் பதிவாகியுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.

“செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 9 மாத காலப்பகுதியில் இந்தக் கொலைகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு முழுவதும் 521 கொலைகள் மட்டுமே பதிவாகியுள்ளன” என்றும் அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், பிரேத பரிசோதனைகளை நடத்துவது தொடர்பான குற்றவியல் நடைமுறைகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரேத பரிசோதனைகளை நடத்துவது தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளில் பொருத்தமான திருத்தங்களைச் செய்வதற்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காகப் பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.

மேற்படி குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காகக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட மேற்படி பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.