யாழில் அமெரிக்கத் துணைத் தூதர் தமிழ் அரசியல் தரப்புக்களுடன் முக்கிய சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர் டக் சோனெக் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு தமிழ் அரசியல் தரப்புக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளைத் தனித்தனியாக அமெரிக்கத் துணைத் தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் தனியாகவும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்ணம் கனகரட்ணம் சுகாஷ், வாசுகி சுதாகர் ஆகியோர் தனியாகவும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்புக்களின்போது அரசியல் பிரதிநிதிகளிடம் சமகால நிலைமைகள் தொடர்பில் அமெரிக்கத் துணைத் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.