வடக்கு மாகாணமே இலங்கையின் போதைப்பொருள் விநியோக மையம்!

“இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் உயிர்கொல்லி போதைப்பொருளை கடத்துகின்ற விநியோகிக்கின்ற மையமாக வடக்கு மாகாணம் மாறியுள்ளது.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அவரது அமைச்சு ஊடாக முன்னெடுக்கவுள்ள நடமாடும் சேவையில் கலந்துகொள்ள வந்துள்ள அமைச்சர் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை – விற்பனை வடக்கில் – யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. எனது யாழ்ப்பாணப் பயணத்தின்போது இது தொடர்பிலும் ஆராயவுள்ளளேன். பொலிஸார் உள்ளிட்ட பொறுப்புக்கூறும் சகல தரப்பினருடனும் சந்திப்பு நடத்தவுள்ளேன்.

வடக்கு மாகாணத்தில் இளைஞர்கள் உயிர்கொல்லிப் போதைபொருள் பாவனைக்கு அடிமையாகி வருவதால் மிகப்பெரும் சமுதாயப் பிரச்சினை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெருமளவான உயிர்கொல்லி போதைப்பொருள் முகவர்கள் வடக்கு மாகாணத்தின் ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் உயிர்கொல்லி போதைப்பொருளைக கடத்தி வருகின்றனர்.

இதனை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.