முப்படையினரின் கண்காணிப்பையும் மீறி வடக்குக்கு எவ்வாறு போதைப்பொருள் வருகின்றது?

“முப்படையினரினதும் பொலிஸாரினதும் 24 மணிநேர முழுநேரக் கண்காணிப்புக்குள் இருக்கும் வடக்கு மாகாணத்துக்குள் போதைப்பொருட்கள் எந்த வழியால் வருகின்றன?”

இவ்வாறு கேள்வி எழுப்பினார் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன.

“போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணம் கல்வியில் மட்டும் இன்னமும் வீழ்ச்சியடையாமல் வீறுகொண்டு பயணிக்கின்றது. இந்தநிலையில், வடக்கில் பாடசாலை மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் கூட தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றார்கள் என்ற செய்தி மிகவும் மனவருத்தத்தைத் தருகின்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் இளையோர் சமூகத்தைக் குறிவைத்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும் புள்ளிகளைக் கண்டுபிடிக்க அனைத்து மட்டங்களிலும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வடக்கிலுள்ள இளையோர் சமுதாயத்தைப் போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுக்க பெற்றோர்கள் மற்றும் கல்வியலாளர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.