சிகரெட், மதுபானத்தால் தினமும் 85 பேர் பலி

புகையிலை மற்றும் மதுபானம் காரணமாக இலங்கையில் தினமும் குறைந்தது 85 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கும் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர், ”கால் போத்தல்” விற்பனையை ஒழிப்பது, இதற்கு ஒரு தீர்வாக அமையுமென தொடர்பில் முன்மொழிந்துள்ளார். “மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஒவ்வொரு நாளும் 85 பேர் உயிரிழக்கின்றனர்.

மீதமுள்ள போதைப் பொருள் பாவனையாளர்களை கணக்கிட்டால் சுமார் 80-100 பேரைக் பலியெடுக்கும் ஒரு பெரிய தொற்று நோய்ப் பற்றி நாங்கள் கலந்துரையாடுகின்றோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சிகரெட்டுகளின் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டால், புகைபிடிப்பதை 80% முதல் 90% வரை நிறுத்த முடியுமென, புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர், கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவிக்கின்றார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ”கால் போத்தல்” நடைமுறை ஊடாகவே இலங்கை மக்கள் அதிக அளவில் மது அருந்துவதாக தெரிவிக்கும் சமாதி ராஜபக்ச, அதனை ஒழிப்பதற்கான ஆணையிடும் சட்ட மசோதாக்களைக் கொண்டுவருவதற்கான விவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“2019ஆம் ஆண்டில் மாத்திரம் 300 மில்லியன் போத்தல்கள் சேர்க்கப்பட்டன. கண்ணாடி போத்தல்களை அப்படிச் சேர்க்கும்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு டெங்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய வருடங்களில் மாத்திரம் 160-190 மில்லியன் வெற்று பியர் கேன்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டிலும் பணியிடத்திலும் பெண்களுக்கு தீங்கு 22% இலங்கை பெண்கள் தங்கள் சொந்த வீடுகளில் புகைபிடிப்பாளர்களால் பாதிக்கப்படுவது ஒரு சோகம் எனக் குறிப்பிட்டுள்ள கலாநிதி சமாதி ராஜபக்ச, இலங்கையில் 11% பெண்கள் பணியிடத்தில் புகைபிடிப்பாளர்களால் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

புகையிலையுடன் வெற்றிலையை உட்கொள்வதால் ஏற்படும் வாய்வழி புற்றுநோயால் இலங்கையில் தினமும் மூன்று பேர் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஒரு பயிற்சி நிகழ்ச்சியில் உரையாற்றிய, மனநல விசேட வைத்தியர் அமில இசுரு, புகைபிடிப்பது மனநோய்க்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.