காணாமல் ஆக்கப்பட்டோர் உயிரோடு இல்லை! – நீதி அமைச்சர் தெரிவிப்பு.

“காணாமல் ஆக்கப்பட்டோர் இன்னமும் உயிருடன் இருப்பார்கள் என்பதற்குச் சாத்தியம் மிகவும் குறைவு. அதனால்தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக இரண்டு இலட்சம் ரூபாவை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் துயரங்களை – உணர்வுகளை நாம் புரிந்துகொள்கின்றோம். அவர்களை நாம் மதிக்கின்றோம்.

உறவுகளைத் தொலைத்த துயரத்திலும் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற ஏக்கத்துடனும் வாழும் குடும்பங்கள் நீதி கேட்டு அரசுக்கு எதிராகப் போராடுவதில் நியாயம் இருக்கின்றது. ஆனால், அவர்களை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தமது சுயலாப அரசியலை மேற்கொள்கின்றார்கள். இது மிகவும் கவலைக்குரிய விடயம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் இன்னமும் உயிருடன் இருப்பார்கள் என்பதற்குச் சாத்தியம் மிகவும் குறைவு. இதை அவர்களின் குடும்பத்தினரிடம் கூறினால் அவர்கள் ஏற்கத் தயாரில்லை. நாம் என்ன செய்வது?

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டுதான் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக இரண்டு இலட்சம் ரூபாவை வழங்க அரசு தீர்மானித்துள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.