ஓய்வு அறிவித்த பொல்லார்டு.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிரன் பொல்லார்டு. இவர் மிதவேகப்பந்து வீச்சாளரும் கூட. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து அந்த அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டுடன் சுமார் 13 ஆண்டுகள் தொடர்ந்து இடம் பிடித்தார். அடுத்த ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.

இன்று மாலை 5 மணிக்கும் வீரர்களை வெளியேற்றி, தக்க வைத்துள்ள வீரர்கள் விவரங்களை 10 அணிகளும் சமர்பிக்க வேண்டும். அந்த வகையில், பொல்லார்டை ரிலீஸ் செய்வதாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்தது. இதனால் அவர் மாற்று அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்டு அறிவித்தார். அவர் அறிவித்த மறுநொடியே, அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அறிவித்தது.

இதனால் வீரராக இல்லாமல், பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்ந்து கைக்கோர்க்கிறார் பொல்லார்டு. இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ”நான் இன்னும் சில வருடங்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் நோக்கம் இருந்த நிலையில், இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடத்திய ஆலோசனையின்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுதல் தேவைப்படுகிறது. ஆகையால் நான் தொடர்ந்து நீடிக்க முடியாது என்பது தெரிவந்தது. அப்புறம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக என்னாலேயே எதிரணியில் விளையாடுவதை பார்க்க முடியாது.

இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து உணர்வுபூர்வமாக குட்-பை சொல்லி விடைபெறவில்லை. ஐ.பி.எல். தொடரில் பேட்டிங் பயிற்சியாளராகவும், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் வீரராகவும் பணியாற்ற ஒப்புக் கொண்டேன்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.