பிரச்சாரத்தின் போது பாலியல் வன்கொடுமை: வேட்பாளர் கைது.

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய அரசியல் கட்சி சார்பில் லக்கல பிரதேச சபைக்கு போட்டியிடும் இந்த வேட்பாளர், 19 வயதுடைய பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தை முடிப்பதற்காக நேற்று வீடு வீடாக சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்கல பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.