பெங்களூரு ரயில் பாலம் அருகே சூட்கேஸில் சிறுமியின் உடல் கண்டெடுப்பு: பெரும் அதிர்ச்சி

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ரயில் பாலம் அருகே பயணப்பொதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரின் புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே உள்ளூர்வாசிகளால் பயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்டது.
அது ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உடலுடன் எந்த அடையாள ஆவணமும் கிடைக்கவில்லை.
அவரின் பெயர், வயது மற்றும் அவர் எங்கிருந்து வந்தார் போன்ற விவரங்களைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பெங்களூரு பொலிஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.