மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கியது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் கரோனா நிலைமையைச் சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகின்றது.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் மும்பையில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இருவர் பலியாகியுள்ளதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் ஒருவருக்கு ஹைபோகால்சீமியா வலிப்புடன் கூடிய நெஃப்ரோடிக் நோயும், மற்றவருக்கு புற்றுநோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர்.

ஜனவரி முதல் மொத்தம் 6,066 பேருக்கு கரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றில் 106 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 101 பேர் மும்பை, புணே, தாணே மற்றும் கோலாப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

தற்போது 52 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளதாகவும் அவர்களின் உடல்நலத்தை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.