இன்றைய தகுதிச் சுற்று-2ல் பஞ்சாப், மும்பை அணிகள் பலப்பரீட்சை
பஞ்சாப் அணி, தகுதிச் சுற்று-1ல் பெங்களூருவிடம் தோற்றது. இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது. இன்று பிரப்சிம்ரன் சிங் (517 ரன்), கேப்டன் ஷ்ரேயஸ் (516), பிரியான்ஷ் ஆர்யா (431) கைகொடுத்தால் நல்லது. பின் வரிசையில் வதேரா (306), ஷசாங்க் சிங் (287) அதிரடி காட்டினால் நல்ல ஸ்கோரை பெறலாம்.
வேகப்பந்துவீச்சில் யான்சென் இல்லாதது பின்னடைவு. இதனால் அர்ஷ்தீப் சிங்கிற்கு கூடுதல் சுமை. காயத்தால் சகால் (14) அவதிப்படுவது பலவீனம். சுழற்பந்துவீச்சில் ஹர்பிரீத் பிரார் (10) ஆறுதல் தருகிறார். இன்று பஞ்சாப் அணி அசத்தினால் 2வது முறையாக பைனலுக்குள் நுழையலாம்.
