ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று சத்தியப் பிரமாணம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினியின் அலுவலகத்தில் வைத்து சட்டத்தரணி முன்னிலையில் இன்று இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு நியமன உறுப்பினர்கள் உட்பட 3 ஆசனங்கள் கிடைத்தன. அதில் இரு பெண்களும், ஓர் ஆண் உறுப்பினரும் அடங்குவர். மேற்படி மூன்று உறுப்பினர்களுமே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்

இதன்போது கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் கருணாதாச உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.