மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரும் ‘அணையா விளக்கு’ போராட்டக் களத்தில் ஐ.நா. ஆணையாளர் – மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரிய ‘அணையா விளக்கு’ போராட்டக் களத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணமத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்ட பின்னர் அதற்கு அருகில் இடம்பெறும் ‘அணையா விளக்கு’ போராட்டக் களத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது மக்கள் செயல் அமைப்பினரால் ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் கோரிக்கைகள் தொடர்பான மகஜர் ஒன்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.