செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்ட ஐ.நா. ஆணையர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று பிற்பகல் ஹெலியூடாக வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் பிற்பகல் 4.30 மணியளவில் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியைப் பார்வையிட்டார்.

சுமார் 30 நிமிடங்கள் வரையில் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட அவர், பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடினார்.

Leave A Reply

Your email address will not be published.