வாகன விபத்தில் 10 பேர் படுகாயம்.
வாகன விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அநுராதபுரம், திரப்பனை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்றுடன் வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெகிராவையில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற வானில் 13 பேர் பயணித்திருந்தனர். அந்த வானில் பயணித்தவர்களில் 10 பேரே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்கைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் திரப்பனை போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
