பொலிஸார் துப்பாக்கிச்சூடு! சந்தேகநபர் ஒருவர் மரணம்!!
கொழும்பு, கடுவெல, கொத்தலாவல – கெக்கிலிவெல சாலைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தார்.
பொலிஸ் தகவலின்படி, சந்தேகநபரைக் கைது செய்ய முயன்றபோது அவர் வாளால் பொலிஸாரைத் தாக்க முயன்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, தற்காப்புக்காகப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சந்தேகநபர் முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்தார் என்று வைத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
