மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நீர்கொழும்பு – குடாப்பாடு பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வீடொன்றின் மதில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு – குடாப்பாடு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.