நல்லூர் தேர்த் திருவிழாவையொட்டி நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழாயொட்டி யாழ்ப்பாணம் மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை வியாழக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா நாளை பாடசாலை தினத்தில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று மதியம் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர்.

இதன்பிரகாரம், உடனடியாகக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளை யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.