உத்தரப் பிரதேசத்தில் கோர விபத்து: பக்தர்களுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்து 8 பேர் பலி, 43 பேர் காயம்

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 8 பேர் பலியாகினர்.

உத்தரப்பிரப் தேசத்தின் காஸ்கஞ்சில் இருந்து ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் திங்கள்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அர்னியா நெடுஞ்சாலை அருகே புலந்த்ஷாஹர்-அலிகார் எல்லையில் அதிகாலை 2.10 மணியளவில் டிராக்டர் பின்னால் இருந்து லாரி திடீரென மோதியது.

இதில் டிராக்டர் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 43 பேர் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்தில் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து போலீஸார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி அதிவேகமாக வந்ததே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான டிராக்டரில் 61 பயணம் செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.