மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம்!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலைப் பகுதியில் கொத்மலை ஓயாவில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருக்கின்றது என்று பொலிஸாருக்குப் பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டது.

இதையடுத்துப் பொலிஸாரால் அந்தச் சடலம் மீட்கப்பட்டது.

நுவரெலியா நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று பரிசோதித்த பின்னர், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறப்பு தடயவியல் வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்து காணப்படுகின்றது.

இந்தச் சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வ்ருய்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.