யாழ்ப்பாணத்தில் 29 பேர் கைது! – கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களும் சிக்கின.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார காலப் பகுதியில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 45 போத்தல் கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், 90 லீற்றர் கோடா, சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் என்பவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி 29 பேரும் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், பொலிஸாரின் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.