யாழில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து தமிழரசு இன்று மரியாதை.
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று, கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு கட்சியினரால் மரியாதை செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நகரில் உள்ள தந்தை செல்வாவின் நினைவிடத்துக்குச் சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்போது கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





