3 சிறுவர்கள் உயிரிழப்பு! – பேசாலைக் கடலில் பரிதாபம்.

மன்னார், பேசாலைக் கடலில் நீராடச் சென்ற நால்வரில் 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தைப்பொங்கல் பண்டிகை நாளான நேற்று மேற்படி 4 பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர்.

அவர்களில் சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தார்.

இதேவேளை, ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் காணாமல்போயிருந்த சிறுவனின் சடலம் நேற்று இரவு கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை, வசந்தபுரம், உதயபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.