புதுடில்லி பறந்த ரில்வின் குழு!
இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் அழைப்பின் பேரில் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை புதுடில்லிக்குப் புறப்பட்டனர்.
புதுடில்லியை அடுத்து குஜராத் மற்றும் கேரள மாநிலங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்யவுள்ளனர். அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும் அவர்கள் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
இந்தியாவில் விவசாயம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான மையங்களை அவர்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விஜயத்தில் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடன் நிறுவனங்களுக்கு இடையேயான ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஜனக, நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், கிட்ணன் செல்வராஜ், ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு உறுப்பினர் ஹேமதிலக கமகே மற்றும் ஜே.வி.பியின் சர்வதேசக் குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுபாஷினி ஆகியோர் இணைந்துள்ளனர்.
